காதல் தேவதையாக அனுபமா பரமேஸ்வரன்!


காதல் தேவதையாக அனுபமா பரமேஸ்வரன்!
x
தினத்தந்தி 24 Aug 2019 10:15 PM GMT (Updated: 24 Aug 2019 11:47 AM GMT)

இளைஞர்களை ஈர்க்கும் காதல் தேவதையாக அனுபமா நடிக்கிறார்.

விஜய் சேதுபதி-திரிஷா ஜோடியாக நடித்த ‘96’ படம், இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த படத்தில் விஜய் சேதுபதியின் காதலியாக திரிஷா நடித்து இருந்தார். அவரை ஒரு காதல் தேவதையாக எண்ணி ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

‘96’ படத்தைப்போல் ஒரு காதல் படம் தெலுங்கில் இப்போது தயாராகி  வருகிறது. ‘நின்னுக்கோரி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ‘96’ படத்தில் திரிஷா நடித்த ‘ஜானு’ கதாபாத்திரம் போல் இளைஞர்களை ஈர்க்கும் காதல் தேவதையாக, அனுபமாவின் கதாபாத்திரம் அமைந்து இருக்கிறது.

இந்த படத்தை பற்றி அனுபமா கூறும்போது, “இப்படி ஒரு வேடத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. இந்த படமும், நான் நடித்து வரும் கதாபாத்திரமும் ஒரு புதிய அனுபவமாக அமைந்து இருக்கிறது” என்றார்.

Next Story