ரஞ்சித் தயாரிப்பில் அடுத்த படம்


ரஞ்சித் தயாரிப்பில் அடுத்த படம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 12:23 PM GMT)

ரஞ்சித் தயாரிப்பில் அடுத்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

‘அட்டகத்தி’ படத்தில் டைரக்டராக அறிமுகமான ரஞ்சித் அவருடைய அடுத்த படமான ‘மெட்ராஸ்’ மூலம் பேசப்பட்டார். இதையடுத்து அவருக்கு ரஜினிகாந்தை வைத்து, ‘கபாலி’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து மீண்டும் ரஜினிகாந்தை வைத்து, ‘காலா’ படத்தை இயக்கினார்.

இந்த 2 படங்களுக்குப்பின், ரஞ்சித் பிரபல டைரக்டர்களில் ஒருவராகி விட்டார். சொந்த பட நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். அவர் தயாரித்த ‘பரி யேறும் பெருமாள்’ படத்துக்கு நிறைய பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்தன. அதைத்தொடர்ந்து ரஞ்சித், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தயாரித்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன.

Next Story