பாலிவுட்டிலேயே இருக்க நினைக்கும் இயக்குனர்


பாலிவுட்டிலேயே இருக்க நினைக்கும் இயக்குனர்
x
தினத்தந்தி 13 Sep 2019 9:30 PM GMT (Updated: 13 Sep 2019 9:14 AM GMT)

தெலுங்கு மொழியில் விஜய்தேவரகொண்டா நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘அர்ஜூன் ரெட்டி.’ இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா என்ற இளம் இயக்குனர் இயக்கியிருந்தார்.

அர்ஜூன் ரெட்டி படம் விஜய் தேவரகொண்டாவை மட்டுமல்லாது, சந்தீப் ரெட்டி வங்காவையும் புகழின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தியது என்றால் அது மிகையல்ல. அதனால்தான் ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இந்தியில் இயக்கும் வாய்ப்பும், சந்தீப் ரெட்டிக்கே கிடைத்தது. ‘கபீர் சிங்’ என்று பெயரிடப்பட்ட இந்தி ரீமேக்கில், ஷாகித் கபூர் நடித்திருந்தார். இந்தியிலும் இந்தப் படம் அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களில் ரூ.300 கோடியை வசூல் செய்து ‘கபீர் சிங்’ முதல் இடத்தில் இருக்கிறது. சந்தீப் ரெட்டி அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக சில தகவல்கள் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் வெளிவந்தன. அதே போல் சந்தீப் ரெட்டியின் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பலரும் காத்திருக்கும் நிலையில், சந்தீப் ரெட்டிக்கு பாலிவுட் சினிமாக்களை இயக்கத்தான் விருப்பம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி, பாலிவுட்டில் ‘கபீர் சிங்’ படத்தை தயாரித்த அதே நிறுவனம், தங்களது அடுத்த படத்தையும் சந்தீப் ரெட்டியே இயக்கினால் அவருக்கு தங்களுடைய வருமானத்தில் 50 சதவீதத்தை கொடுப்பதாக ஆசையும் காட்டியிருக்கிறதாம். அதனால் சந்தீப் ரெட்டியின் முதுகில் ஆசை சிறகு பெரியதாக முளைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

Next Story