வியக்க வைத்த தெலுங்கு நாயகன்!


வியக்க வைத்த தெலுங்கு நாயகன்!
x
தினத்தந்தி 28 Sep 2019 11:15 PM GMT (Updated: 2019-09-28T22:29:58+05:30)

‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 பிரமாண்டமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர், தெலுங்கு நாயகன் பிரபாஸ். இந்த 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு பட உலகில் பிரபாசின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது. இந்த சூடு குறைவதற்குள் அவர், ‘சாஹோ’ என்ற மற்றொரு பிரமாண்டமான படத்தில் நடித்தார்.

சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாஹோ’  படம், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் படுதோல்வி அடைந்தது. ஆனால், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘சாஹோ’ வெற்றி பெற்றது. ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ‘சாஹோ’ படத்துக்காக கதாநாயகன் பிரபாஸ் ரூ.70 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

இது, மற்ற தெலுங்கு நாயகர்களுக்கு சவாலாக அமைந்து இருக்கிறது. பிரபாசை விட ஒரு ரூபாயாவது அதிக சம்பளம் வாங்கிவிட வேண்டும் என்று மனதுக்குள் சபதம் எடுத்து இருக்கிறார்கள்!

Next Story