ஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்


ஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்
x
தினத்தந்தி 11 Oct 2019 4:25 PM GMT (Updated: 11 Oct 2019 4:25 PM GMT)

ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜூலிக்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ‘லிக்கின் டூ கெட் அவுட்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாத் துறைக்குள் நுழைந்தவர் ஏஞ்சலினா. அதன் பிறகு ‘சைப்ராங்-2’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஏஞ்சலினா ஜூலி தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதே ஆச்சரியப்படத்தக்க விஷயம்தான். 2014-ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான திரைப்படம், ‘மேல் பிசன்ட்.’ இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘மேல்பிசன்ட்: மிஸ்ட்ரீஸ் ஆப் ஈவில்’ என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. 

இந்தப் படம் வருகிற 18-ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் பாலிவுட்டிலும் இந்தி மொழியில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியாகிறது. இதில் ஏஞ்சலினா ஜூலிக்கு, குரல் கொடுத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். இதை உறுதிப்படுத்தும் வகையில், ‘மேல்பிசன்ட்’ படத்தில் ஏஞ்சலினா வரும் கதாபாத்திர தோற்றத்தில் இருப்பது போன்றே, ஐஸ்வர்யா ராயையும் நடிக்க வைத்து அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவை, ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்ட்ராகிராமிலும் வெளியிட்டுள்ளார். அதை 24 மணி நேரத்தில் 11 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள்.

Next Story