நித்யா மேனனுக்கு பதிலாக அதிதிபாலன்


நித்யா மேனனுக்கு பதிலாக அதிதிபாலன்
x
தினத்தந்தி 25 Oct 2019 10:42 AM GMT (Updated: 2019-10-25T18:04:28+05:30)

அதிதிபாலனுக்கு மேலும் ஒரு மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.

தமிழில் ‘அருவி’ படத்தின் மூலமாக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் அதிதிபாலன். அதன்பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதற்காக பல வாய்ப்புகளை தவிர்த்துக் கொண்டு வந்தவருக்கு, மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு முன்னணி கதாநாயகனாக இருக்கும் நிவின்பாலியின் ஜோடியாக ‘படவேட்டு’ என்ற படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு மேலும் ஒரு மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. ஷாகித் காதர் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன் நடிக்கும் படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்தப் படத்தில் இருந்து சில காரணங்களால் நித்யாமேனன் விலகிக் கொண்டார். இதையடுத்து அந்த கதாநாயகி வாய்ப்பு அதிதி பாலனைத் தேடி வந்திருக்கிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் அதிதிபாலன்.

Next Story