சிபிராஜ் படத்தின் பெயர், ‘கபடதாரி’


சிபிராஜ் படத்தின் பெயர், ‘கபடதாரி’
x
தினத்தந்தி 25 Oct 2019 11:01 AM GMT (Updated: 25 Oct 2019 11:01 AM GMT)

சிபிராஜ் நடிக்கும் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

சிபிராஜ்-நந்திதா ஸ்வேதா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கும் படத்துக்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. பெயர் இல்லாமலே படம் வளர்ந்து வந்தது. இந்த நிலையில் அந்த படத்துக்கு, ‘கபடதாரி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

சிபிராஜ் நடிப்பில் ‘சத்யா’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி டைரக்டு செய்கிறார். லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். சென்னை, ஐதராபாத் ஆகிய 2 நகரங்களிலும் படம் வளர்ந்து வருகிறது!

Next Story