வில்லன் நடிகருக்கு சிபாரிசு!


வில்லன் நடிகருக்கு சிபாரிசு!
x
தினத்தந்தி 12 Nov 2019 10:03 AM GMT (Updated: 12 Nov 2019 10:03 AM GMT)

வில்லன் நடிகருக்கு ஒரு படம் செய்து கொடுங்கள் என்று டைரக்டரிடம் சிபாரிசு செய்திருக்கிறார் நாயகன்.

சமீபத்தில் திரைக்கு வந்த இரண்டெழுத்து படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த படத்தின் கதை முதலில் ஒரு வில்லன் (கான்) நடிகரிடம் சொல்லப்பட்டது. பின்னர் அவர் மாற்றப்பட்டு, முருகனின் மறுபெயர் கொண்ட நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

படத்தின் வெற்றி, வில்லன் நடிகரை விரக்தி அடைய வைத்து விட்டதாம். நண்பர்களிடம் சொல்லி, சொல்லி வருத்தப்படுகிறார். இதை கேள்விப்பட்ட முருகனின் மறுபெயர் கொண்ட நடிகர், “அந்த வில்லன் நடிகருக்கு ஒரு படம் செய்து கொடுங்கள்” என்று டைரக்டரிடம் சிபாரிசு செய்து இருக்கிறார்.

Next Story