திரிஷா ஆசை நிறைவேறியது!
தமிழ், தெலுங்கு சினிமாவில் 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் திரிஷாவுக்கு மூன்றே மூன்று நீண்ட கால ஆசைகள் இருந்தன.
ஒன்று, கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும்...இந்த ஆசை, ‘மன்மதன் அம்பு’ படத்தின் மூலம் நிறைவேறியது.
அடுத்து ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ரஜினிகாந்துடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை, ‘பேட்ட’ படத்தின் மூலம் நிறைவேறியது. சிரஞ்சீவியுடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை ஒரு தெலுங்கு படத்தின் மூலம் நிறைவேறியது. ‘பாபநாசம்’ புகழ் ஜீத்து ஜோசப் இயக்கும் ஒரு புதிய மலையாள படத்தில் திரிஷா, மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார்!
Related Tags :
Next Story