`டேட்டிங்’ போக விரும்பும் நடிகை!


`டேட்டிங்’ போக விரும்பும் நடிகை!
x
தினத்தந்தி 14 Dec 2019 11:15 PM GMT (Updated: 14 Dec 2019 4:11 PM GMT)

`பிக்பாஸ்’ சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், நடிகை ரைசா வில்சனும் ஒருவர்.

 ஹரீஸ் கல்யாணுடன், `பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ரைசா வில்சன் நடித்தார். அடுத்து அதே ஹரீஸ் கல்யாணுடன், `தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

``ஹரீஸ் கல்யாணுடன் `டேட்டிங்’ போக விரும்புகிறேன். அதுவும் தமிழகத்தின் நலனுக்காக...’’ என்று அவர் கூறியிருக் கிறார். இவர் `டேட்டிங்’ செல்வதற்கும், தமிழகத்தின் நலனுக்கும் என்ன தொடர்பு? என்று ரசிகர்கள் தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார்கள்!

Next Story