ஹிருத்திக் ரோஷன் மீது ஒரு ஈர்ப்பு!


ஹிருத்திக் ரோஷன் மீது ஒரு ஈர்ப்பு!
x
தினத்தந்தி 21 Dec 2019 11:30 PM GMT (Updated: 21 Dec 2019 5:40 PM GMT)

‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் பிரபலமான சுனைனா அழகும், இளமையும் உள்ள கதாநாயகி. இருப்பினும் இவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பிரகாசிக்கவில்லை.

சுனைனா  பிரபல கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதே அதற்கு காரணம். காத்திருந்து பார்த்த சுனைனா இப்போது, வெப் சீரிஸ் படங்களுக்கு போய்விட்டார்.

அவரிடம், ‘‘உங்கள் கனவு நாயகன் யார்?’’ என்று கேட்கப்பட்டது. ‘‘பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்தான் என் கனவு நாயகன். முதன்முதலாக அவர் மீதுதான் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்’’ என்று சுனைனா கூறினார்!

Next Story