சண்டை பயிற்சியில், சாக்‌ஷி அகர்வால்!


சண்டை பயிற்சியில், சாக்‌ஷி அகர்வால்!
x
தினத்தந்தி 28 Dec 2019 11:30 PM GMT (Updated: 28 Dec 2019 12:02 PM GMT)

தமிழ் பட உலகில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகமாக தயாராகி வருகின்றன.

பழிவாங்க துடிக்கும் பேய் அல்லது குடும்பத்தினரை கொன்ற வில்லனை சம்ஹாரம் செய்யும் துணிச்சல் மிகுந்த பெண் வேடங்களை மையப்படுத்தி நிறைய கதைகள் உருவாகின்றன. இப்படி ஒரு திகில் கதையில் நடித்து வருகிறார், சாக்‌ஷி அகர்வால்.

இந்த படத்தை ஜி.ஜெ.சத்யா இயக்குகிறார். ‘‘இயல்பாகவே சாக்‌ஷி அகர்வால், துணிச்சல் மிகுந்தவர். அவருடைய மன உறுதி என்னை ஆச்சரியப்படுத்தியது. படத்தில் அவர் துணிச்சல் உள்ள பெண்ணாக நடிக்கிறார். இதற்காக அவர், தினமும் சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த அர்ப்பணிப்பு உணர்வு அவரை மேலும் உயர்த்தும்’’ என்கிறார், ஜி.ஜெ.சத்யா!

Next Story