கவர்ச்சி உடையில், அதிதி!

‘அருவி’ படத்தில் அறிமுகமான அதிதி பாலனுக்கு அந்த படத்தில் நடித்ததற்காக பாராட்டுகள் குவிந்தன.
அதிதி பாலன் துணிச்சலுடன் எய்ட்ஸ் நோயாளியாக நடித்தது, சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ரசிகர்கள் மத்தியில் ஆதரவை அள்ளினார். அவருடைய நடிப்பை பாராட்டாதவர்கள் இல்லை. விருதுகளையும் வாங்கி கொடுத்தது.
கவர்ச்சியை நம்பாமல், நடிப்பை மட்டும் நம்பிய அவருக்கு பெரிய படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் கவர்ச்சி உடை அணிந்திருந்தார். அதைப்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
அவருடைய கவர்ச்சி உடை சமூகவலைத்தளங்கள் மூலம் விவாதிக்கப்பட்டது. ‘அருவி’ படத்தில் நடித்தவரா இவர்? என்று வியப்பு அடைந்தார்கள். அதிதி பாலன் இப்போது, ‘படவேட்டு’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்!
Related Tags :
Next Story