‘‘கனவுகள் கண்டிப்பாக நிஜமாகும்!’’


‘‘கனவுகள் கண்டிப்பாக நிஜமாகும்!’’
x
தினத்தந்தி 1 Feb 2020 11:15 PM GMT (Updated: 1 Feb 2020 6:27 PM GMT)

வரலட்சுமி சரத்குமார் மிக குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இதுபற்றி அவரே கூறுகிறார்:-

‘‘சினிமாவில் நீடித்து நிலைத்து இருப்பது, ஒரு கடினமான பயணம்தான். நல்ல விஷயங்களை அடைவது சுலபமல்ல என்பார்கள். அது என் விஷயத்தில் உண்மை. ஆனாலும், கனவுகள் கண்டிப்பாக ஒருநாள் நிஜமாகும். என் வாழ்க்கையில் இந்த கட்டத்தை அடைய நான் பல சவால்களை சந்தித்து இருக்கிறேன். இப்போது நான் 25 படங்களை முடித்து இருக்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்த டைரக்டர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 25 படங்களில் நடித்து இருப்பதை ஆசீர்வாதமாக கருதுகிறேன். என்றும் என் பணியில் சிறந்து விளங்க முயற்சிப்பேன். என் சிறந்த நடிப்பை தந்து உங்களின் நல்ல பொழுதுபோக்குக்கு உதவுவேன்.’’


Next Story