பரவை முனியம்மா பாராட்டு!


பரவை முனியம்மா பாராட்டு!
x
தினத்தந்தி 16 Feb 2020 12:30 AM GMT (Updated: 15 Feb 2020 2:12 PM GMT)

பாட்டி வேடங்களில் நடித்து வந்த பரவை முனியம்மாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

பரவை முனியம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன், அவருடைய உடல்நிலை சரியாகும் வரை நடிகர் அபிசரவணன் உடன் இருந்து கவனித்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அபிசரவணன்-வெண்பா நடித்து வெளியான ‘மாயநதி’ படம் அனைவரின் வரவேற்பை பெற்றது. அதை கேள்விப்பட்ட பரவை முனியம்மா, ‘மாயநதி’ படத்தை மதுரையில் அபிசரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்தார்.

‘‘நீண்ட நாட்கள் கழித்து தியேட்டரில் போய் படம் பார்த்த அனுபவம் மனதுக்கு மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருந்தது’’ என்று அவர் கூறினார். அபிசரவணனின் நடிப்பையும் பாராட்டினார்.

Next Story