சினிமா துளிகள்

இளையராஜா கொடுத்த பரிசு! + "||" + Gift of Ilayaraja

இளையராஜா கொடுத்த பரிசு!

இளையராஜா கொடுத்த பரிசு!
இளையராஜா இசையில் சமீபத்தில் திரைக்கு வந்த படம், ‘சைக்கோ.’
மிஷ்கின் இயக்கி, உதயநிதி நடித்துள்ள இந்த படத்தில், கபிலன் எழுதிய ‘‘உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா...’’ என்ற பாடலும், ‘‘நீங்க முடியுமா நினைவு தூங்குமா’’ என்ற பாடலும் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதுபற்றி கபிலன் சொல்கிறார்:-

‘‘நான் பாடல் எழுத வந்து பல ஆண்டுகள் ஆகியும் இளையராஜாவுடன் பணியாற்றவில்லையே என்ற குறை இருந்து வந்தது. அந்த குறை, ‘நந்தலாலா’ படத்துக்கு பாடல் எழுதியபோது நீங்கியது. அதன் பிறகு அவருடைய இசையில் பல பாடல்கள் எழுதியிருந்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ‘சைக்கோ’ படத்தின் பாடல்களுக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பு, மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இது, இளையராஜா எனக்கு கொடுத்த பரிசு. அவருக்கு மிகுந்த நன்றி.’’