இந்தியில் ரீமேக்காகும் தமிழ் படங்கள்


இந்தியில் ரீமேக்காகும் தமிழ் படங்கள்
x
தினத்தந்தி 21 Feb 2020 3:15 AM GMT (Updated: 2020-02-20T17:52:30+05:30)

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து, 2007-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘பொல்லாதவன்.’ இந்தப் படம் ‘கன்ஸ் ஆப் பனாரஸ்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது.

 தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் கரன்நாத் நடிக்கிறார். டேனியல் பாலாஜி கதாபாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமும், கிஷோர் நடித்த கதாபாத்திரத்தில் அபிமன்யுசிங்கும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சேகர் சூரி இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார், கணேஷ் வெங்கட்ராம். இந்தப் படம் 28-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படத்தையும் இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தியில் இந்தப் படத்தின் நாயகனாக நடிக்க ஹிருத்திக் ரோஷனிடம் பேசப்பட்டிருப்பதாகவும், படத்தின் கதை அவருக்கு பிடித்திருப்பதால், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிகிறது.

2011-ம் ஆண்டு வெளியான ‘காஞ்சனா’ திரைப்படம், இந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தப் படத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். தமிழில் நடித்து இயக்கிய ராகவா லாரன்ஸ், இந்தி படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

Next Story