சீரியல் கில்லர் கதைகள்


சீரியல் கில்லர் கதைகள்
x
தினத்தந்தி 28 Feb 2020 9:44 AM GMT (Updated: 28 Feb 2020 9:44 AM GMT)

திரில்லர் வகை கதைகளை அதிகமாக இயக்குவதில் மலையாள இயக்குனர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். அங்கு சீரியல் கில்லர் வகை திரைப்படங்களும் அவ்வப்போது வந்து ரசிகர்களை அசரடித்து விட்டுச் செல்லும். அப்படி வந்த திரைப்படங்களில் முக்கியமானது பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த ‘மெமரீஸ்.’

 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், தமிழில் அருள்நிதி நடிப்பில் ‘ஆறாது சினம்’ என்ற பெயரில் வெளிவந்தது. மலையாளத்தில் சமீபத்தில், அதாவது கடந்த மாதத்தில் கூட குஞ்சகோ போபன் நடிப்பில் ‘அஞ்சாம் பாதிரா’ என்ற திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. 

இந்த நிலையில் டொவினோ தாமஸ் நடிப்பில் ‘பாரன்சிக்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படமும் தொடர் கொலைகளைச் செய்யும் ஒரு கொலைகாரனை கண்டறியும் வகையிலான திரைப்படம்தான். இந்தப் படத்தில் பாரன்சிக் அதிகாரியாக டொவினோ தாமஸ் நடிக்கிறார்.

 கொலையாளியை கண்டறியும் முக்கிய போலீஸ் கதாபாத்திரத்தில் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். இந்தப் படத்தை அகிலா பால் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக இருக்கிறது.

Next Story