பிருத்விராஜின் வித்தியாச தோற்றம்


பிருத்விராஜின் வித்தியாச தோற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2020 3:58 PM IST (Updated: 28 Feb 2020 3:58 PM IST)
t-max-icont-min-icon

மலையாளத்தில் பிரபல இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்.’ மலையாளத்தில் கதாபாத்திரத்திற்காக மெனக்கெடும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர், பிருத்விராஜ்.

பிருத்விராஜ்,  இந்தப் படத்தில் கால மாறுதலுக்கு ஏற்ப, மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் துபாயில் ஆடு மேய்க்கும் வேலை செய்பவனின் தோற்றம். 

இதற்காக தன்னுடைய உடல் எடையும் 30 கிலோவை குறைத்திருக்கிறார், பிருத்விராஜ். எலும்பும் தோலுமாக இருப்பது போன்ற இந்தத் தோற்றம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த தோற்றத்தைக் கொண்டுவருவதற்காக, பிருத்விராஜ் மிகவும் கஷ்டப்பட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

முறைப்படி பயிற்சியாளர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இந்த உடல் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். இதற்காக பசி, தூக்கமின்மை ஆகியவற்றை சகித்துக் கொண்டதாகவும், மன அழுத்தத்தால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இதுபோன்ற முயற்சிகளில் யாரும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
1 More update

Next Story