சினிமா துளிகள்

சிவகார்த்திகேயனின் வித்தியாசமான வேடம்! + "||" + Sivakarthikeyan's Different Role!

சிவகார்த்திகேயனின் வித்தியாசமான வேடம்!

சிவகார்த்திகேயனின் வித்தியாசமான வேடம்!
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் `டாக்டர்' படத்தை அவரே தயாரிக்கிறார். இதில் பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார்.
யோகி பாபு, வினய் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் இவர்களுடன் நடிக்கிறார்கள். `கோலமாவு கோகிலா’ புகழ் நெல்சன் இயக்குகிறார்.

கதையின் பெரும்பகுதி சம்பவங்கள் கோவாவில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக கோவாவில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதால், அவருடைய கதாபாத்திரம், `சஸ்பென்ஸ்' ஆக வைக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த அவருடைய படங்களில் இருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், இது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

தொடர்புடைய செய்திகள்

1. ‘அயலான்’ படத்தில் வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘அயலான்’ என்று பெயர் சூட்டப்பட்டதுமே அந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.