விக்னேஷ் சிவன் படத்தில், சமந்தா?


விக்னேஷ் சிவன் படத்தில், சமந்தா?
x
தினத்தந்தி 15 March 2020 9:30 AM IST (Updated: 14 March 2020 9:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் பட உலகில் இருந்து தெலுங்கு பட உலகுக்கு போன கதாநாயகிகளில், சமந்தாவும் ஒருவர். `பாணா காத்தாடி' படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன.

சமந்தா, பிரபல கதாநாயகர்கள் ஜோடியாக நடித்தபின், பட வாய்ப்புகள் அதிகமாக வந்தன. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். 

தற்போது அவர், விக்னேஷ் சிவன் இயக்கும் `காத்து வாக்குல இரண்டு காதல்' என்ற படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிப்பார் என்ற தகவல் வெளியானது.

அந்த படத்தில் இருந்து அவர் திடீரென்று விலகி விட்டதாக கூறப்படுகிறது. அதை சமந்தா ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை!
1 More update

Next Story