‘வசந்தம் வந்தது’


‘வசந்தம் வந்தது’
x
தினத்தந்தி 1 Jan 2021 10:30 PM GMT (Updated: 31 Dec 2020 10:37 PM GMT)

தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மருத்துவ வசதி வேண்டும் என்று போராடுகிற ஒரு பெண்ணை பற்றிய கதை, ‘வசந்தம் வந்தது’ என்ற பெயரில் தயாராகிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம், இது. இதில் கதாநாயகியாக கிருஷ்ணா கவுதம் நடிக்கிறார். இவர், ராம்கோபால் வர்மாவின் ‘12 ஓ கிளாக்’ படத்தில் நடித்தவர்.

பாரதி செங்கோடு இயக்கும் இந்தப் படத்தை தமிழினி கண்ணன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல், புதுச்சேரி, கோவை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

Next Story