சினிமா துளிகள்

உண்மை கதையில் நடிக்கும் சசிகுமார் + "||" + Acting in the true story Sasikumar

உண்மை கதையில் நடிக்கும் சசிகுமார்

உண்மை கதையில் நடிக்கும் சசிகுமார்
சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான சசிகுமார் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து இருந்தார். தற்போது ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. பாக்யராஜின் முந்தானை முடிச்சு ‘ரீமேக்’ படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் புதிதாக உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை விருமாண்டி இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான க.பெ.ரணசிங்கம் படத்தை இயக்கி பிரபலமானவர். சசிகுமார் நடிக்கும் படம் 1975-ல் தமிழ் திரையுலகில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கும் இந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். அதற்கான தேர்வு நடக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்துக்கு பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.