அதர்வாவுடன் நடிக்க வைப்பதாக இளம்பெண்களிடம் மோசடி


அதர்வாவுடன் நடிக்க வைப்பதாக இளம்பெண்களிடம் மோசடி
x
தினத்தந்தி 24 Feb 2021 10:27 PM GMT (Updated: 24 Feb 2021 10:27 PM GMT)

அதர்வா படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக சமூக வலைத்தளத்தில் மோசடி நடந்துள்ளது. இயக்குனர் அஸ்வின் சரவணனின் போலி வலைத்தள பக்கத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் இதனை செய்துள்ளனர்.

அஸ்வின் சரவணன் ஏற்கனவே நயன்தாரா நடித்த பேய் படமான மாயா, டாப்சி நடித்த கேம் ஓவர் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். 2018-ல் எஸ்.ஜே.சூர்யா நடித்த இறவாக்காலம் படத்தை இயக்கினார். இந்த படம் பண பிரச்சினையால் இன்னும் வெளியாகவில்லை. தனது பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து அஸ்வின் சரவணன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலி ஐடி உருவாக்கி ஆள்மாறாட்டம் செய்து பல பெண்களிடம் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண்களை கேட்டு வருகின்றனர். 

அதில் யாரும் ஏமாற வேண்டாம்'' என்று கூறியுள்ளார். அத்துடன் போலி கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டையும் இணைத்துள்ளார். அந்த கணக்கில் இருந்து ஒருவர் பெண்களிடம் நான் அதர்வாவை வைத்து படம் இயக்குகிறேன். விருப்பம் இருந்தால் உங்களை எனது படத்தில் நாயகி ஆக்குகிறேன்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story