சினிமா துளிகள்

ரூ.3.6 கோடி பரிசு அறிவித்த ஹாலிவுட் நடிகையின் 2 நாய்கள் மீட்பு + "||" + Hollywood actress 2 dogs rescue

ரூ.3.6 கோடி பரிசு அறிவித்த ஹாலிவுட் நடிகையின் 2 நாய்கள் மீட்பு

ரூ.3.6 கோடி பரிசு அறிவித்த ஹாலிவுட் நடிகையின் 2 நாய்கள் மீட்பு
பிரபல ஹாலிவுட் நடிகை லேடி காகா. இவர் புகழ்பெற்ற பாடகியாகவும் இருக்கிறார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் லேடி காகா பிரஞ்சு புல்டாக் இனத்தை சேர்ந்த 2 நாய்களை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த நாய்களை காகாவின் வீட்டு வேலைக்காரர் வெளியே அழைத்து சென்றபோது அவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு நாய்களை காரில் கடத்தி சென்று விட்டான். காயமடைந்த வேலைக்காரர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இத்தாலி சென்றுள்ள லேடி காகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''என் செல்ல பிராணிகள் கடத்தப்பட்டதால் இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன். அதை கண்டுப்பிடித்து தருபவர்களுக்கு ரூ.3.6 கோடி பரிசு வழங்குவேன்.

நாய்கள் எனக்கு கிடைக்க உதவுங்கள்'' என்று கூறியிருந்தார். இரண்டு நாய்களுக்கு இவ்வளவு பரிசு தொகையா என்று பலரும் ஆச்சரியப்பட்டு பேசினர். இந்த நிலையில் 2 நாய்களையும் போலீசார் பத்திரமாக மீட்டு லேடி காகாவிடம் ஒப்படைத்தனர். கடத்தியவர்கள் மற்றும் மீட்கப்பட்ட விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.