விவாகரத்தால் பயந்து வாழ்ந்த அமலாபால்


விவாகரத்தால் பயந்து வாழ்ந்த அமலாபால்
x
தினத்தந்தி 1 March 2021 12:18 AM GMT (Updated: 2021-03-01T05:48:56+05:30)

தமிழில் மைனா படத்தில் பிரபலமான நடிகை அமலாபால் தொடர்ந்து வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

 தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். அமலாபாலும், பிரபல இயக்குனர் விஜய்யும் காதலித்து 2016-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் அமலாபால் தீவிரமாக நடித்து வருகிறார். ஆடை படத்தில் உடைகள் அணியாமல் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த நிலையில் அமலாபால் விவாகரத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் விவாகரத்து செய்து பிரிந்தபோது எனக்கு யாரும் ஆதரவு தரவில்லை. எல்லோரும் என்னை பயமுறுத்த முயற்சி செய்தனர். நான் முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது எனது மனநிலை பற்றியோ, எனது மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றியோ யாரும் கவலைப்படவில்லை'' என்றார். அமலாபால் தற்போது 2 தமிழ் படங்களிலும், 2 மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

Next Story