‘வீட்ல விசேஷங்க' பாக்யராஜ் பட தலைப்பில் ஆர்.ஜே. பாலாஜி படம்


‘வீட்ல விசேஷங்க பாக்யராஜ் பட தலைப்பில் ஆர்.ஜே. பாலாஜி படம்
x
தினத்தந்தி 1 March 2021 7:47 PM GMT (Updated: 1 March 2021 7:47 PM GMT)

ஆயுஷ்மன் குரானா நடித்து 2018-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய பதாய் ஹோ இந்தி படமும் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் ஆயுஷ்மன் கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பதுடன் படத்தை இயக்கவும் செய்கிறார்.

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆயுஷ்மன் குரானாவின் விக்கி டோனர் படம் தமிழில் ஹரிஷ் கல்யாண், விவேக் ஆகியோர் நடிக்க தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் ஆகி வரவேற்பை பெற்றது. ஆயுஷ்மன் குரானா நடித்துள்ள இன்னொரு இந்தி படமான அந்தாதூன் படத்தையும் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இதில் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கி பிரபலமான ஜே.ஜே.பிரெட்ரிக் டைரக்டு செய்கிறார்.

இந்த வரிசையில் ஆயுஷ்மன் குரானா நடித்து 2018-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய பதாய் ஹோ இந்தி படமும் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் ஆயுஷ்மன் கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பதுடன் படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த படத்துக்கு பாக்யராஜ் இயக்கி நடித்து 1994-ல் திரைக்கு வந்த வீட்ல விசேஷங்க தலைப்பை பயன்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டனர். இதற்காக பாக்யராஜை அணுகி அனுமதி கேட்டனர். அவரும் ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே நயன்தாராவை வைத்து நடித்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் ஓ.டி.டி.யில் வெளியானது நினைவுகூரத்தக்கது.

Next Story