சினிமா துளிகள்

4 படங்களில் நடிக்கும் நடிகை வனிதா விஜயகுமார் + "||" + Vanitha acting in 4 films

4 படங்களில் நடிக்கும் நடிகை வனிதா விஜயகுமார்

4 படங்களில் நடிக்கும் நடிகை வனிதா விஜயகுமார்
கொரோனா ஊரடங்கில் பீட்டர்பால் எனபவரை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதா விஜயகுமார் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறி தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அனல் காற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்கான தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து ‘2 கே அழகானது காதல்' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

தொடர்ந்து பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. 4-வதாக வசந்த பாலன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர். வனிதா படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கி இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வலைத்தளத்தில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.