சினிமா துளிகள்

வேலுநாச்சியாராக நடிக்க விருப்பம் - சாக்‌ஷி அகர்வால் + "||" + Willingness to act as Velu Nachiyar - Sakshi Agarwal

வேலுநாச்சியாராக நடிக்க விருப்பம் - சாக்‌ஷி அகர்வால்

வேலுநாச்சியாராக நடிக்க விருப்பம் - சாக்‌ஷி அகர்வால்
நடிகை சாக்‌ஷி அகர்வால் சமீபகாலமாக நடிப்பதோடு எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுதல், ஆரோக்கிய உணவு, பசி கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு போன்ற சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
வேலுநாச்சியார் வேடத்தில் போட்டோ ஷூட்டும் நடத்தி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் தற்போது பிரபுதேவாவுடன் பஹிரா என்ற திகில் கதையில் நடிக்கிறேன். சுந்தர்.சியின் அரண்மனை 3-ம் பாகத்தில் வருகிறேன். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் நான் கடவுள் இல்லை படத்திலும் முக்கிய வேடம். த நைட் படத்தில் தற்போது நடித்து வருகிறேன். மேலும் 2 புதிய படங்களில் நடிக்க இருக்கிறேன். 4 வருடங்களாக சமூக சேவை பணிகளை செய்கிறேன். சமீபத்தில் எச்.ஐ.வி.யால் 
பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து பாட்டு நடனம் என்று நேரத்தை செலவிட்டேன். ஒருவர் இரு குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முன்வந்தால் பசியே இருக்காது என்ற விழிப்புணர்வு பணியையும் செய்கிறேன். சமூக சேவையில் மகிழ்ச்சி கிடைக்கிறது. நிறைய படங்களில் நடித்து சிறந்த நடிகை என்ற பெயர் வாங்கி ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்பதே இப்போதைய நோக்கம். வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. திகில், பேய் படங்களில் நடிக்க பிடிக்கும். வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. குறிப்பாக வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க ரொம்ப 
ஆசை. அதனால்தான் அவர் தோற்றத்தில் போட்டோ ஷூட் செய்து இருக்கிறேன். தென்னிந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட முதல் ராணி அவர்தான். அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்''

இவ்வாறு சாக்‌ஷி அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அடாத மழையில் விடாமல் வேலை செய்யும் சாக்‌ஷி அகர்வால்
சென்னையில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் தனது வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.
2. நடிகைகளை அழகாக காண்பிப்பார் - சாக்‌ஷி அகர்வால்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.