மீண்டும் வில்லனாக பகத் பாசில்

மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பகத் பாசில் சில வருடங்களுக்கு முன்பு நடிகை நஸ்ரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். வேலைக்காரனில் வில்லத்தனமாக வந்தார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க பகத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சுகுமார் இயக்குகிறார்.
புஷ்பா படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வில்லன் காதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளனர். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது. விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவரது வில்லத்தனமான நடிப்புக்கு வரவேற்பு கிடைத்ததால் புஷ்பா படத்திலும் வில்லனாக நடிக்க வைக்க விரும்பினர். தற்போது பகத் பாசிலை தேர்வு செய்து இருப்பதாக அறிவித்து உள்ளனர். கால்ஷீட் பிரச்சினையால் விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து அதிரடி சண்டை படமாக புஷ்பா தயாராகிறது.
Related Tags :
Next Story