வில்லியாக நடிக்க தயார்; காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
''திருமணத்துக்கு பிறகு அதிக மரியாதை தருகிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது அம்மாவின் கஷ்டம் என்ன என்பது திருமணம் செய்த பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. எனது காதல் திருமணத்தில் ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு கதை உள்ளது. எனது கணவரை பத்து வருடத்துக்கு முன்பே தெரியும். ஆரம்பத்தில் நட்பாகத்தான் பழகினோம். கொரோனா ஊரடங்கில்தான் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்தது. இதை ஊரடங்கு திருமணம் என்று சொல்லலாம். திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. கதை தேர்விலும் வித்தியாசம் பார்க்கவில்லை. எனக்கு காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம். வில்லியாக நடிப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் கதை பிடித்து இருக்க வேண்டும். நிஜ வாழ்க்கையில் ஆன்லைனில் பொருள் வாங்க ரூ.3 ஆயிரம் கொடுத்து ஏமாந்தேன். அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டேன்.
இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story