சினிமா துளிகள்

கவர்ச்சியை விரும்பாத சுரபி + "||" + Who do not like glamor actress surabi

கவர்ச்சியை விரும்பாத சுரபி

கவர்ச்சியை விரும்பாத சுரபி
தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமான சுரபி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி படத்திலும் நடித்தார்.
தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ள அடங்காதே படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சுரபி அளித்த பேட்டி வருமாறு:-

“நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எனது பெற்றோர் அதை செய் இதை செய் என்று என்னை எப்போதுமே தொந்தரவு செய்தது இல்லை. நடிக்க வேண்டும் என்று நினைத்ததுமே பயிற்சி எடுத்துக்கொண்டேன். அது எனக்கு பயனாக இருந்தது. எனது முதல் தமிழ் படத்தில் பெரிய வசனங்கள் இருந்தன. ரொம்ப கஷ்டப்பட்டு வசனம் பேசினேன். அந்த படத்தில் எடுத்த பயிற்சி எந்த மொழியிலும் என்னால் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கியது. கவர்ச்சியாக நடிக்க ஏன் மறுக்கிறாய் என்று எல்லோரும் என்னை கேட்கிறார்கள். எல்லை மீறாத கவர்ச்சியில் நடிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் கவர்ச்சி என்ற பெயரில் குட்டை பாவாடை அணிந்து உடலை காட்டுவது என்னால் முடியாது. பட வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் பரவாயில்லை. அந்தமாதிரி மட்டும் நடிக்க மாட்டேன்.'' இவ்வாறு சுரபி கூறினார்.