புது கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்


புது கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
x
தினத்தந்தி 26 March 2021 10:30 PM GMT (Updated: 26 March 2021 2:31 PM GMT)

‘இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரிக்கும் உரிமையை டைரக்டர் ஆர்.கண்ணன் வாங்கியிருக்கிறார்.

கேரளாவில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ‘இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரிக்கும் உரிமையை டைரக்டர் ஆர்.கண்ணன் வாங்கியிருக்கிறார். 2 மொழி படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் கதை பற்றி ஆர்.கண்ணன் கூறியதாவது:-

“படித்து பட்டம் பெற்ற ஒரு பெண்ணின் கனவுகள் திருமணத்துக்குப்பின் நிறைவேறுகிறதா, இல்லையா? திருமணத்துக்கு பிறகு அவளுடைய வாழ்க்கை எப்படியிருக்கிறது? கணவரும், புகுந்த வீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள்? என்பதே ‘இந்தியன் கிச்சன்’ படத்தின் கதை.

கதையின் நாயகியான அந்த பெண் கதாபாத்திரத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராகுல் ரவீந் திரன் நடிக்கிறார். மசாலா பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது”.

Next Story