தேவயானி, அந்தியூரில் குடியேறினார்


தேவயானி, அந்தியூரில் குடியேறினார்
x
தினத்தந்தி 26 March 2021 5:32 PM GMT (Updated: 26 March 2021 5:32 PM GMT)

தேவயானி-ராஜகுமாரன் தம்பதிக்கு அந்தியூரில் சொந்தமாக பண்ணை வீட்டுடன் கூடிய தோட்டம் இருக்கிறது.

 (ராஜகுமாரனின் சொந்த ஊர், அந்தியூர் ஆகும்) நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தியூர் வந்து போய்க்கொண்டிருந்த தேவயானி, இப்போது நிரந்தரமாக அந்த ஊரிலேயே குடியேறி விட்டார்.

அவருடைய மகள்கள் இரண்டு பேரும் ஊட்டியில் உள்ள ஒரு கான்வென்டில் படிக்கிறார்கள். ஏற்கனவே ‘கோலங்கள்’ என்ற டி.வி. தொடரில் நடித்த தேவயானி சில வருட இடைவெளிக்குப்பின், ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இருந்தால் மட்டும் அவர் அந்தியூரில் இருந்து சென்னைக்கு வந்து போகிறார்.

Next Story