‘சின்னத்திரை’ பவித்ரா லட்சுமியுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகன் ஆனார்


‘சின்னத்திரை’ பவித்ரா லட்சுமியுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகன் ஆனார்
x
தினத்தந்தி 15 April 2021 11:00 PM GMT (Updated: 15 April 2021 6:01 PM GMT)

‘கொலை கொலையா முந்திரிக்கா’ என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், சதீஷ்.

 ‘மதராச பட்டினம்’, ‘மெரீனா’, ‘எதிர்நீச்சல்’, ‘கத்தி’, ‘றெக்க’, ‘கலகலப்பு’ உள்பட பல படங்களில் நடித்த அவர் முதன்முதலாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘சின்னத்திரை’ நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், ஸ்ரீமன், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்பவர், கிஷோர் ராஜ்குமார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.


Next Story