‘ஹாரிபாட்டர்’ பட நடிகை ஹெலன் மரணம்


‘ஹாரிபாட்டர்’ பட நடிகை ஹெலன் மரணம்
x
தினத்தந்தி 19 April 2021 9:58 AM GMT (Updated: 19 April 2021 9:58 AM GMT)

உலக அளவில் புகழ்பெற்ற திரைப்படம் ‘ஹாரிபாட்டர்’. இந்த படத்துக்கு அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். ‘ஹாரிபாட்டர்’ படத்தின் பல பாகங்கள் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றன.

வசூலும் குவித்துள்ளன. ‘ஹாரிபாட்டர்’ படங்களில் நர்சியா மல்பய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஹெலன் மெக்ரோரி. ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்கைபால்’ படத்திலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்து இருக்கிறார். ஹெலன் மெக்ரோரிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ஹெலன் மெக்ரோரி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. இந்த தகவலை அவரது கணவரும், நடிகருமான டமியன் லிவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். ஹெலன் மெக்ரோரி மறைவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story