விழாக்கள் நடத்த பார்வதி எதிர்ப்பு


விழாக்கள் நடத்த பார்வதி எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 April 2021 5:45 PM GMT (Updated: 19 April 2021 5:45 PM GMT)

கேரள மாநிலம் திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழா கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை.

இந்த ஆண்டும் விழா நடைபெறாது என்று எதிர்பார்த்த நிலையில் வருகிற 23-ந்தேதி பூரம் விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இதனை தமிழில் பூ, சென்னையில் ஒருநாள். உத்தம வில்லன், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி கடுமையாக சாடி உள்ளார். பூரம் திருவிழாவை நடத்தினால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள அவர் பூரம் விழாவை ரத்துசெய்ய வேண்டும் என்று கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்துவதை கண்டித்தார். கும்பமேளா திருவிழாவில் திரண்ட கூட்டத்தையும் விமர்சித்தார். கும்ப மேளாவில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தகவலையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Next Story