கொரோனாவில் இருந்து தப்பிக்க ஆவி பிடிக்கிறேன் - நடிகை பிரியா வாரியர்


கொரோனாவில் இருந்து தப்பிக்க ஆவி பிடிக்கிறேன் - நடிகை பிரியா வாரியர்
x
தினத்தந்தி 21 April 2021 11:14 PM GMT (Updated: 21 April 2021 11:14 PM GMT)

மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தில் கண் அடித்து பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு.

“எனது அப்பா, அம்மா, பாட்டி, தம்பி எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். வீட்டில் 60 வயதை தாண்டியவர்கள் இருக்கிறார்கள். எனவே கொரோனா காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறேன். கொரோனாவில் இருந்து தப்பிக்க படப்பிடிப்பில் தினமும் ஆவி பிடிக்கிறேன். வெந்நீரில் மஞ்சள் கலந்து குடிக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வேறு நகரங்களில் இருந்து வீட்டுக்கு போகும்போது 2 நாட்கள் யாருடனும் சேராமல் தனியாக இருப்பேன். சாப்பாட்டை எனது அறைக்கு அனுப்ப சொல்வேன்.

முக்கியமாக எனது தாத்தா, பாட்டி அருகில் நான் போகவே மாட்டேன். வீட்டில் எங்கு சுற்றினாலும் முகவசம் அணிந்தே இருப்பேன். 2 நாட்கள் எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிந்த பிறகுதான் குடும்பத்தினரோடு சேர்ந்து இருப்பேன.

சிறுவயதிலேயே நடிப்பில் ஆர்வம் இருந்தது. கண் அடிக்கும் காட்சியால் பிரபலமான பிறகு படிப்பை விட்டு விட்டேன். இப்போது அம்மா எம்.பி.ஏ. படிக்க சொல்கிறார். எனக்கு வேலைக்கு போக விருப்பம் இல்லை. நடிப்புதான் முக்கியம். நிறைய பேர் டாக்டருக்கு படித்து விட்டு நடிக்க வந்து இருக்கிறார்கள். அதை சொல்லி அம்மாவை சமாதானப்படுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story