குணச்சித்திர நடிகர் செல்லத்துரை மரணம்


குணச்சித்திர நடிகர் செல்லத்துரை மரணம்
x
தினத்தந்தி 1 May 2021 2:49 AM GMT (Updated: 1 May 2021 2:49 AM GMT)

பிரபல மூத்த குணச்சித்திர நடிகர் செல்லத்துரை. இவர் குடும்பத்துடன் சென்னை பெரியார் நகரில் வசித்து வந்தார். வீட்டில் இருந்தபோது செல்லத்துரைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84.

செல்லத்துரை அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு நடிக்க வந்தார். நாடகங்களில் நடித்த அவர் பின்னர் சினிமாவில் நடித்தார். ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜய்யுடன் நண்பன், தெறி, கத்தி, ஆர்யாவின் ராஜா ராணி, உதய நிதியுடன் மனிதன், தனுசின் மாரி, நயன்தாராவுடன் அறம் மற்றும் நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

மாரி படத்தில் செல்லத்துரை பேசும், ‘அப்படியா விஷயம்’ என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். செல்லத்துரை உடல் நேற்று பிற்பகல் கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மரணம் அடைந்த செல்லத்துரைக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story