சினிமா துளிகள்

ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ஒலிம்பியா மரணம் + "||" + Oscar winner Hollywood actress Death of Olympia

ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ஒலிம்பியா மரணம்

ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ஒலிம்பியா மரணம்
50-க்கும் அதிகமான திரைப்படங்களிலும், ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.
பிரபல ஹாலிவுட் நடிகை ஒலிம்பியா டுகாகிஸ். இவர் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவுக்கு வந்தார். 50-க்கும் அதிகமான திரைப்படங்களிலும், ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

1987-ல் வெளியான மூன்ஸ்ட்ரக் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றார். 1992-ல் வெளியான சினடாரா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை வென்றார்.

இவரது வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் ஒலிம்பியா என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஒலிம்பியாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நியூயார்க் நகரில் உள்ள வீட்டில் சிகிச்சை பலன் இன்றி ஒலிம்பியா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89. ஒலிம்பியா மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்- நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.