சினிமா துளிகள்

கொரோனாவுக்கு 2 நடிகைகள் பலி + "||" + 2 actresses killed for Corona

கொரோனாவுக்கு 2 நடிகைகள் பலி

கொரோனாவுக்கு 2 நடிகைகள் பலி
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பிரபலங்கள் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி இறந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்தி நடிகைகள் ஶ்ரீபிரதா, அபிலாஷா பாட்டீல் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஶ்ரீபிரதா இந்தி படங்கள் மட்டுமன்றி ஏராளமான போஜ்புரி படங்களிலும் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகர்கள் தர்மேந்திரா, கோவிந்தா, ராஜ்பாப்பர் ஆகியோருடன் இணைந்து நடித்து இருக்கிறார். ஶ்ரீபிரதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி ஆஸ்பத்திரியில சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார். இதுபோல் இந்தி நடிகை அபிலாஷா பாட்டீலும் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளார். இவர் இந்தி, மமராத்தி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வாரணாசிக்கு ஒரு படப்பிடிப்புக்காக சென்று விட்டு மும்பை திரும்பியபோது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. இவர் தற்கொலை செய்து கொண்ட பிரபல இந்தி நடிகர் சுஷாந் சிங் ராஜ்புத்துடன் சிச்சோரே, அக்‌ஷய்குமாரின் குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்கனியா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.