உருவ கேலியால் புண்பட்ட இலியானா


உருவ கேலியால் புண்பட்ட இலியானா
x
தினத்தந்தி 8 May 2021 5:17 AM GMT (Updated: 8 May 2021 5:17 AM GMT)

தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ள இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“இந்த சமூகம் தோற்றத்தை பார்த்துத்தான் ஒருவரை எடைபோடுகிறது. நான் உருவ கேலிக்கு ஆளாகி இருக்கிறேன். எனது தோற்றத்தை விமர்சித்து புண்படுத்தினார்கள். அதை நினைத்து அழுதேன். ஒரு சமயம் ரொம்ப ஒல்லியாக இருந்தேன். அதை பார்த்து குச்சி மாதிரி இருக்கிறேன் என்றனர். இதனால் எடையை கூட்டி குண்டானேன். அதை பார்த்து இடுப்பா இது, அடுப்பு மாதிரி இருக்கிறது என்றனர். பிறகு மீண்டும் எடையை குறைத்தேன். மற்றவர்கள் என் உருவ தோற்றம் பற்றி தொடர்ந்து கேலி செய்ததால் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட யோசித்தேன். சமூக 
வலைத்தளத்தில் முகம் தெரியாத ஒவ்வொருவரும் எனது தோற்றத்தை கேவலப்படுத்தி பதிவுகள் வெளியிட்டனர். இறுதியில் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன். நம் மீது தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தால்தான் மற்றவர்களின் கேலி நம்மை வருத்தப்பட வைக்கும். ஆரம்பத்தில் இத்தகைய மனோபாவம் எனக்கு இல்லாமல் இருந்ததால் கஷ்டப்பட்டேன்.''

இவ்வாறு இலியானா கூறினார்.

Next Story