தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா பாதிப்பு


தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 8 May 2021 11:15 PM GMT (Updated: 8 May 2021 7:26 PM GMT)

சிறந்த நடிப்புக்காக 2 முறை தேசிய விருது பெற்றவர், பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்.

இவர் இப்போது டைரக்டர் விஜய் இயக்கிய ‘தலைவி’ (தமிழ்) படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதை.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததும் கங்கனா ரணாவத் சென்னையில் இருந்து மும்பை சென்றார். இந்த நிலையில், கங்கனா ரணாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story