ஹன்சிகா படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?


ஹன்சிகா படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?
x
தினத்தந்தி 9 May 2021 9:11 PM GMT (Updated: 9 May 2021 9:11 PM GMT)

திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆலோசிக்கின்றனர்.

கொரோனா 2-வது அலை பரவலால் திரையரங்குகள் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன. தற்போது முழு ஊரடங்கையும் பிறப்பித்து உள்ளனர். இதனால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆலோசிக்கின்றனர். ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன், அனுஷ்காவின் நிசப்தம், திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு, ஆர்யாவின் டெடி, மாதவன் நடித்துள்ள மாறா உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டியில் வந்துள்ளன. இந்த நிலையில் ஹன்சிகாவின் 50-வது படமான மஹா படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட இருப்பதாக பலர் டுவிட்டர் பக்கத்தில் தகவல் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு பதில் அளித்து படத்தின் இயக்குனர் ஜமீல் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''மஹா படத்தை தொடங்கி 4 வருடங்கள் ஆகி விட்டன. படம் பற்றி உண்மையற்ற தகவல்கள் வருகின்றன. எனது படத்தை பற்றிய சரியான தகவலை தெரிந்து கொள்ள இன்னும் சில தினங்கள் காத்திருங்கள். இந்த படத்துக்கு சிம்பு ரசிகர்கள் காட்டும் அன்புக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.

Next Story