2 நடிகைகளுக்கு கொரோனா


பூஜிதா; பீனா அந்தோனி
x
பூஜிதா; பீனா அந்தோனி
தினத்தந்தி 13 May 2021 12:09 PM GMT (Updated: 13 May 2021 12:09 PM GMT)

பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா. இவர் கீர்த்தி சுரேசுடன் இணைந்து மிஸ் இந்தியா படத்தில் நடித்துள்ளார். தர்சாகுடு, ரங்கஸ்தலம், ராஜு காடு, பிராண்ட் பாபு, ஹேப்பி வெட்டிங், கல்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

பூஜிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பூஜிதா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். தேவையான மருந்துகள் எடுத்து வருகிறேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் அனைவரும் வீட்டில் இருங்கள். உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

இதுபோல் பிரபல மலையாள நடிகை பீனா அந்தோனிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அவரது கணவரும் நடிகருமான மனோஜ் தெரிவித்துள்ளார்.

Next Story