சினிமா துளிகள்

ஓ.டி.டி.யில் வரும் ஜெய் படம் + "||" + Coming in OTT Jai movie

ஓ.டி.டி.யில் வரும் ஜெய் படம்

ஓ.டி.டி.யில் வரும் ஜெய் படம்
கொரோனா ஊரடங்கினால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள்.
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள குற்றமே குற்றம் என்ற படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்தது.

தற்போது ஓ.டி.டி.யில் குற்றமே குற்றம் படம் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ரிலீசாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் திவ்யா நாயகியாக நடித்துள்ளார். சும்ருதி வெங்கட, ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் ஆகியோரும் உள்ளனர்.

வைபவ், வாணிபோஜன் நடித்துள்ள மலேஷியா டூ அம்னீஷியா படம் இந்த மாதம் இறுதியில் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளனர். விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், ஹன்சிகா நடித்துள்ள மஹா, திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.