முகமது நபியை புகழ்ந்து 2 இசை வாரிசுகளின் பாடல்


முகமது நபியை புகழ்ந்து 2 இசை வாரிசுகளின் பாடல்
x
தினத்தந்தி 15 May 2021 11:15 PM GMT (Updated: 2021-05-16T01:39:15+05:30)

இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜாவும், ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் இணைந்து முகமது நபியை புகழ்ந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.

மக்களின் வேண்டுகோளை ஏற்று மதீனா நகருக்கு முகமது நபிகள் வருகை புரிந்தபோது, மதீனா மக்களால் வரவேற்று பாடப்பட்ட பாடல் அது. ‘‘சகோதரர் அமீனுடன் இணைந்து பாடியதை மகிழ்ச்சியாக உணர்கிறேன்’’ என்று யுவன்சங்கர் ராஜாவும், ‘‘அன்பு சகோதரர் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று அமீனும் கூறியிருக்கிறார்கள். ‘‘இந்த பாடல் மூலம் வருகிற அனைத்து வருமானமும் தேவையுள்ள ஏழை எளியோருக்கு வழங்கப்படும்’’ என்று இருவரும் தெரிவித்தார்கள்.

Next Story