சினிமா துளிகள்

முடங்கிய காஜல்அகர்வால் படங்கள் + "||" + Paralyzed Pictures by Kajal Agarwal

முடங்கிய காஜல்அகர்வால் படங்கள்

முடங்கிய காஜல்அகர்வால் படங்கள்
ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்தபோது காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்தது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் நடித்து கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது. அவரது பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிந்து தணிக்கை குழு சர்ச்சையில் சிக்கி நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்தபோது காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு பாக்கி இருந்த அந்த படத்தின் காட்சிகளை நடித்து முடித்து விட்டார். அதுவும் கொரோனாவால் ரிலீசாகாமல் உள்ளது.

இதுபோல் கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க தயாராவதால் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

திரிஷா நடிக்காமல் விலகிய சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் இப்போது கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 2 தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்து அந்த படங்களும் சில பிரச்சினைகளால் முடங்கி உள்ளன.