மனித வெடிகுண்டாக நடிக்கும் சமந்தா

இந்தியில் வெளியான பேமிலிமேன் வெப் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ராஜ், டிகே ஆகியோர் இயக்கி இருந்தனர்.
மனோஜ்பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடித்து இந்தியில் வெளியான பேமிலிமேன் வெப் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ராஜ், டிகே ஆகியோர் இயக்கி இருந்தனர். இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பேமிலிமேன் தொடரில் நடிப்பது குறித்து சமந்தா கூறும்போது, “விதிகளை உடைக்கும் வாய்ப்பை ஓ.டி.டி. தளங்கள் வழங்குகின்றன. பேமிலிமேன் 2 தொடரில் நான் பல விதிகளை உடைத்து இருக்கிறேன். என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்கள் ஆச்சரியப்படுவார்கள். திரைப்படங்களில் பொதுவான கதாபாத்திரங்களில்தான் நடிக்க முடியும் ஓ.டி.டி.யில்தான் பரிசோதனை செய்து பார்க்க முடிகிறது'' என்றார்.
இந்த தொடரில் சமந்தாவின் கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் பேமிலிமேன் 2-ம் பாகத்தில் சமந்தா பயங்கரவாத குழுவை சேர்ந்த மனித வெடிகுண்டாக நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story