கொரோனா பரவல்; சினிமா படப்பிடிப்பில் புதிய கட்டுப்பாடு

கொரோனா பரவலை தடுக்க அரசு முழு ஊரடங்கை பிறப்பித்து உள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே இனிமேல் சினிமா படப்பிடிப்புகளில் பங்கேற்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது, “இனிமேல் திரைப்பட தயாரிப்புக்கு முந்தைய பிந்தைய பணிகள், சினிமா படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட திரைப்பட தொழில்களில் பணியாற்ற கொரோனா தடுப்பூசி போட்டவர்களைத்தான் அனுமதிப்போம். அதனால் எல்லோரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
திரைப்படங்களில் உள்ள அந்தந்த யூனியன்களுக்கு இந்த தகவலை தெரிவித்து விடுங்கள். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே படப்பிடிப்புகளில் இனிமேல் கலந்து கொள்ள முடியும். தொழில்நுட்ப பணிகளிலும் பங்கேற்க முடியும்.உடல்நிலையை கருதி தடுப்பூசி போட முடியாது என்று கருதுபவர்கள் அதுகுறித்த விளக்க கடிதத்தை சங்கத்துக்கு கொடுக்க வேண்டும். மற்ற எல்லா உறுப்பினர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’' என்றார்.
Related Tags :
Next Story